GREEN INDIA !




Tuesday, 6 December 2011

Matha..Pitha..Guru..Theivam...!

ஒரு நாள் இரவு யாரோ முனங்கும் சத்தம் திடுக்கிட்டு எழுந்தான் ரமேஷ் வெளியில் பயங்கர மழை அறையை விட்டு வெளியில் வந்தான் அவனது அப்பா  தான்  ஹாலில் ஒரு மூலையில் குளிரினால் நடுங்கி முனங்கி கொண்டு படுத்து இருந்தார் பகல் நேரம் நல்லா தூங்கிட வேண்டியது இரவு நேரம் தூங்காமல் உயிரை எடுக்க வேண்டியது.. வேலை பார்த்துட்டு  வந்து நிம்மதியா தூங்க முடியுதா கோபமாக சொல்லிவிட்டு படார் என்று கதவை தாளிட்டு கொண்டு கொண்டான் கோபமாக ! அடுத்த நாள் விடியற் காலையில் ரமேஷ் இன் மனைவி கோகிலா அவசரமாக ரமேஷ் ஐ அழைத்தாள் என்னங்க இங்க வந்து பாருங்க உங்க அப்பா பண்ணி வச்சு இருக்கிற காரியத்தை படுக்கயிலயே சிறுநீர் கழித்து விட்டார். இதை பார்த்த ரமேஷ் மிகவும் கோபமாக உன்னோட ஒரே தொல்லை இவ்ளோ வயசு ஆச்சு கொஞ்சம் கூட அறிவே இல்லை உனக்கு. ரமேஷ்  இன் அப்பா மிகவும் பரிதாபமாக எதுவும் பேச முடியாதவராக நின்று கொண்டுஇருந்தார் ரமேஷ் இன் அம்மா இரண்டு வருடத்திற்கு முன்பு இறந்ததில் இருந்து கிராமத்தில் உள்ள தனது பழைய வீட்டை விற்று விட்டு ரமேஷ் உடன் இருந்து  வந்தார். எல்லாம் நம் தலை எழுத்து என்று கோபமாக அலுவலகம் சென்றான் ரமேஷ். திடீர் என்று தொலை பேசி அழைப்பு ரமேஷ் இன் மனைவியிடமிருந்து என்னங்க உங்க அப்பா தூங்கிட்டே இருக்கார் நீங்க போனதில் இருந்து எழுப்பினாலும் எந்திருக்க மாற்றார் சீக்கிரம் வாங்க ! போனை துண்டித்து விட்டு  கிளம்பினான். அவசரமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அங்கு அவனின் அப்பா இறுக்கி ஒரு படத்தை அணைத்த படி படுத்து இருந்தார் ஆனால் அவரின் இதயத்துடிப்பு நின்று இருந்தது ! அவர் அணைத்து    இருந்து அந்த படம் ரமேஷ் இன் சிறு வயது படம் அம்மா அப்பா வுடன் எடுத்து கொண்டது.. தன கடந்த கால நினைவுகளை நினைத்து கண் கலங்கினான்.. ரமேஷ்...

No comments:

Post a Comment